தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கரூர் தமிழ் புலிகள் மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியதாவது…
இந்த மாநாடு வெறும் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக இது

அமைந்துள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசையும், அதற்கு “அடிமையாக” இருக்கும் அதிமுகவையும் வரும் தேர்தலில் தமிழகத்தை விட்டு “ஓட ஓட விரட்ட வேண்டும்” என்று அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கலைஞர் வழங்கிய 3% உள் இட ஒதுக்கீட்டின் பயன்களையும், திமுக ஆட்சியில் அம்மக்களுக்கு

வழங்கப்படும் முன்னுரிமைகளையும் பட்டியலிட்டார்.
தமிழகம் முழுவதும் அருந்ததியர் மக்களுக்காக 159 சமுதாயக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், கரூரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட கூடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அருந்ததியர் சமூக மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க ரூ.36 லட்சம் வரை நிதியுதவி

வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
திமுக கூட்டணியில் தொடர்வது என்ற தமிழ் புலிகளின் முதல் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார்.
மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் இரண்டு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதாக உறுதி அளித்தார்.

