சீன இந்தியர்களுக்கு உதவ தயார்…. தமிழக அரசு

130
Spread the love
‘சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்திய துாதரகம் தயாராக உள்ளது’ என, சீனாவில் உள்ள இந்திய துாதரகத்தின், துணை தலைமை அதிகாரி அயூக்னோ விமல், தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவி வரும், ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் குறித்து, 24ம் தேதி கடிதம் எழுதியிருந்தீர்கள். இங்குள்ள சுகாதார நிலை குறித்து, இந்திய அரசு தொடர்ந்து, உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனா அரசும், சூழ்நிலையை நன்றாக ஆராய்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நகரை விட்டு வெளியேற விடாமல், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் கிடைப்பதை, சீனா அரசு உறுதி செய்துள்ளது. கிருமி தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் பரப்பப்படுகின்றன.பாதிப்பு ஏற்பட்டால், உடனே அவர்கள் செல்ல வேண்டிய, பிரத்யேக மருத்துவமனைகள் குறித்த தகவல்களும், விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹூபய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை, இந்திய துாதரக அதிகாரிகள் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.

இந்திய துாதரக அதிகாரிகளை, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள, +8618 61208 3629, +8618 61208 3617 என்ற, இரண்டு ஹாட்லைன் போன் எண்களை உருவாக்கி உள்ளோம். இது தவிர, ‘வீசாட்’ என்ற இணையதள குழுவை உருவாக்கி, அதில், ஹுபயில் வசிக்கும் இந்தியர்களை இணைத்து, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் வசதியையும், ஏற்படுத்தி இருக்கிறோம். பல்கலைகளில் படிக்கும், இந்திய மாணவர்களுக்கு, உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா என, பல்கலை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளுடன், இந்திய துாதரகம் தொடர்ந்து பேசி வருகிறது. சீனாவில் நிலவும் கடுமையான சூழ்நிலை கருதி, பீஜிங்கில் உள்ள, சீனா அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுடனும், ஹுபய், மாகாண அரசு அதிகாரிகளுடனும் பேசி, நிலைமையை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க, இந்திய துாதரகம் தயாராக உள்ளது. 

LEAVE A REPLY