எங்களுக்கு துணை முதல்வர்.. “கொளுத்தி போட்டது” சென்னை காங்கிரஸ்…

436
Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக திமுக-காங் கூட்டணி இருக்குமா? இல்லையா? அப்படியே இருந்தாலும் காங்கிரசுக்கு மிகக்குறைந்த அளவு சீட்டு தான் திமுக கொடுக்கும் என்கிற தகவல்கள் உண்மையா? என்கிற கேள்வி காங்கிரசார் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று  சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 12வது தீர்மானம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.. 10 வது தீர்மானத்தில் திமுக-காங் கூட்டணி தொடர வேண்டும், 11வது தீர்மானத்தில் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 12வது தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை காங்கிரசில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள விவகாரம் திமுகவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.. இந்த தீர்மானம் தொடர்பாக தமிழக காங் தலைமை என்ன விளக்கம் கொடுக்கப்போகிறது என்பதைப் பொருத்தே எங்களது கருத்து இருக்கும் என திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.. 

LEAVE A REPLY