தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள அரசு அனுமதித்திருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று SETC பேருந்துகள் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற கேரள அரசு அனுமதி.
கேரள அரசின் அனுமதியால் தமிழக பக்தர்கள் 20கிமீ வரை கேரள பேருந்துகளில் அலைய வேண்டிய நிலை இனி இருக்காது.
மண்டல பூஜை, மகர ஜோதியை முன்னிட்டு வரும் 15ந் தேதி முதல் ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.