Skip to content

கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வரும் வழியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே இன்று காலை 10.30 மணிக்கு  காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர் பலியானார்கள்.

இவர்கள் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்து  சாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சை பெரியகோயிலுக்கு வரும் வழியில் இந்த விபத்தில் இறந்தனர்.  தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

error: Content is protected !!