Skip to content

டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

காலி டாஸ்மாக் பாட்டில்களை குடித்துவிட்டு எறிந்து விடுவதால் சுற்றுப்புற சூழல் விவசாய நிலங்கள் விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை செயல்படுத்தி வருகிறது. டாஸ்மாக்கில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் தான் சேகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

தொழிற்சங்கங்கள் போராட்டம் வாயிலாகவும், முறையான கடிதம் மூலமாகவும், மேலாண்மை இயக்குநரிடம் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். அதனை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளை முதுநிலை மண்டல மேலாளர்கள் அழைத்து பேசினார்கள். இதில் அனைத்து சங்கத்தினரும் காலி பாட்டில் சேகரம் செய்ய தனி ஒரு முகமை அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மட்டும் எட்டு அமைப்புக்கள் இணைந்து வரும் டிசம்பர் – 3 ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பேட்டியின் போது… தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன், மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம்,மாநில பொருளாளர் ஜெய்கணேஷ்.மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து, தமிழ்நாடு டாஸ்மாக் மேற்பார்வையாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன்,மாநில பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!