Skip to content

திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, டிச. 2,3,4 தேதிகளில் தனியார் மற்றும் டாஸ்மாக் மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!