ஒரு வேள தீர்ந்திருச்சுண்ணா…… டாஸ்மாக்கை நோக்கி படையெடுப்பு….

1088
Spread the love

10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு என்ற அறிவிப்பு மதுபிரியர்களை உதறல் எடுக்க வைத்துள்ளது. நாளை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும்… நாளைக்கு வாங்கிக்கொள்ளலாம்…..ஆனாலும்…. 15 நாட்களுக்கு லீவு…. திருட்டு பயம்…. அதனால புது ஸ்டாக் வராது…. இருக்குற ஸ்டாக்கத்தான் விப்பாணுங்க…. ஒருவேள நாளைக்கு தீர்ந்திருச்சுண்ணா….. என்ற கேள்வி எழும்பி மது விரும்பிகளுக்கு பெரும் மன உளைச்சலை தந்திருக்கும் போல, விளைவு…. இன்றே படையெடுக்க தொடங்கி

விட்டனர். டாஸ்மாக்கில் இருந்து ஒரு பாட்டிலுடன் திரும்பி சென்றவர்கள்  மிக சொற்பமே. அனைவருமே பெரிய பைகளில் பாட்டில்களை கிழிய கிழிய நிரப்பிக்கொண்டு துாக்கி சென்றனர். அதிலும் எலைட் கடைகளில் பெட்டி பெட்டியாக வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.

LEAVE A REPLY