Skip to content

தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…

  • by Authour

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும். இந்த ஓ.டி.பி சரிபார்ப்பு முறை விரைவில் அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, ஓ.டி.பி அடிப்படையிலான தட்கல் அங்கீகார அமைப்பு ரயில் எண் 12009/12010, மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற ரயில்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆ.ர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரயில்வே கவுன்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்த மாற்றத்தின் நோக்கம், வெளிப்படையான தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!