Skip to content

திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

திருச்சி, லால்குடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று அகிலாண்டபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி உத்தமர் கோயில் பகுதியில் இறங்கி உள்ளார். இறங்கிய பின்னர் அவர் கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து பிரியா கொள்ளிடம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின்  அடிப்படையில்  ஆசிரியை பிரியாவிடம் நகையை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!