Skip to content

நோயாளி ஆசிரியர்களுக்கு சலுகை… ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தீவிர நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் ந.சண்முகநாதன்
கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முக நாதன் தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மாநிலத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிக்கு விருப்பம் தெரிவித்து தன்விபரக்கடிதம் அளித்து உள்ளனர். இந்நிலையில் தீவிர நோய்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் கட்டாயத் தேர்தல் பணிக்கு விருப்பக்கடிதம் தருமாறு பல்வேறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) வாய்மொழியாக
கோரி வருகின்றனர்.

எனவே எங்களது மாநில அமைப்பின்சார்பில் தீவிர நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்.
(புற்றுநோய் (Cancer), இதய நோய்கள் (Heart disease), சிறுநீரகக் கோளாறு காரணமான டயாலிசிஸ் (Dialysis) மற்றும் அண்மைக்காலத்தில்அறுவை சிகிச்சை(Recent major surgery) செய்து கொண்டவர்கள், மகப்பேறு மற்றும் பாலூட்டும் பெண்ணாசிரியர்கள்,மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்,பணிநிறைவு ஆசிரியர் மற்றும் பணிநீட்டிப்பு ஆசிரியர்கள்,தொடர் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன்‌ பரிசீலித்து ‌மனிதாபிமான அடிப்படையில் தேர்தல் பணிகளில் இருந்து முழுவிலக்கு அளித்து உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரை பெரிதும் விரும்பிக் கேட்டுக்கொள்வதாக தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!