Skip to content

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தமிழகத்திலே அமமுக கைப்பற்றியது. அதில் அப்போது அமமுகவில் இருந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் பேரூராட்சிக்கு உரிய நிதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.‌ இதனால் கடந்த நான்கரை ஆண்டு காலமாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மத்திய மாவட்ட செயலாளரும் ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து முடக்கப்பட்டுள்ள நிதி வழங்கிட வேண்டும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அலுவலகத்தை போட்டு போட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!