இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
இந்த நிலையில் மற்றொரு சீனியர் வீரரான விராட்கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் வரை அணியில் நீடிக்குமாறு விராட்கோலியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
ரோகித் ஓய்வை அறிவித்த நிலையில் அவருக்கு பதில், தமிழக வீரர் சாய் சுதர்சனை களம் இறக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வந்தது. தற்போது ஐபிஎல்லில் குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஆடும் சாய் சுதர்சன், ரோகித் சர்மாவுக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில், இப்போது கோலியும் ஓய்வு பெறப்போவதாக கூறி வருவதால் கிரிக்கெட் வாரியம் , கோலிக்கு பதில் யார் என்ற யோசனையில் உள்ளது.