வங்க தேச தலைநகர் டாக்காவில் அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI போர் விமானம் கல்லூரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த விபத்தில், பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் மதியம் விமானம் விபத்துக்குள்ளானது.மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மாணவர்கள் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.