தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அந்த இளைஞர் பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரைச் சுட்டுப்பிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

