Skip to content

மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி. வி. ராஜேந்திரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் முன்னாள் தலைவர் நாஞ்சில் வரதராஜன், மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் வயலூர் ராமநாதன், விவசாய அணி தலைவர் ஜேம்ஸ், பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், செயலாளர் வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!