Skip to content

தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுப்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!