Skip to content

தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

தஞ்சையை அடுத்த செங்கப்பட்டியில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்துதுக்கு சொந்தமான இருப்பு குடோன் உள்ளது. இதில் வைத்திரந்த 125 மீட்டர் கேபிள் வயர்கள், 4 நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார்களை சுத்தம் செய்யும் 7 அடுக்கு கொண்ட சல்லடை திரும்பு போயின. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆனந்த் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வின்சிசாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வல்லம் பெரியார் நகரைச் சேர்ந்த கபாலி என்ற தமிழரசன் (24), வல்லம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த (23) ஆகியோர் திருடியது தெரிய வந்தது.
2 ஆண்டுகள் சிறை
இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று தஞ்சை குற்றவில் நீதிமன்றம் எண்-3ல் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை மாஜிஸ்திரேட்டு ராஜே ஷ் க்ணணன் விசாரணை நடத்தி, கபாலி என்ற தமிழரசன், அரவிந்த் ஆகிய 2 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
38 நாளில் தீர்ப்பு
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா, அரசு வக்கிலு் லாவண்யா, கோர்ட்டு போலீஸ் மோகன்ராஜ் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார். இந்த திருட்டு சம்பவம் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி நடந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு 38 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!