Skip to content

தஞ்சை… இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது..

தஞ்சாவூரில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று முறைகேடாக நடக்க முயன்ற வாலிபரை கிழக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் தஞ்சாவூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியை சேர்ந்த கே.மகேஸ்வரன் (28) என்ற வாலிபர் அறிமுகம் ஆகி உள்ளார். இந்நிலையில் கடந்த இருபதாம் தேதி இரவு அந்த இளம் பெண் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மகேஸ்வரன் அந்த இளம் பெண்ணிடம் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன். பைக்கில் செல்லலாம் வாருங்கள் என்று அழைத்துள்ளார். ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் மகேஸ்வரனை நம்பி அந்த இளம் பெண் பைக்கில் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் கொடிக்காலூர் பைபாஸ் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு பைக்கை ஓட்டிச் சென்ற மகேஸ்வரன் அங்கு அந்த இளம் பெண்ணிடம் தவறான முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண், மகேஸ்வரனிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்தார். பின்னர் இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீசில் அந்த இளம் பெண் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
error: Content is protected !!