தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன.
தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் உள்ளனர்.
இதன் காரணமாக விவசாயிகள் கடந்த பத்து நாட்களாக சாலை ஓரங்களில் கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர். லாரி கிடைக்காம கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லை கிடங்கிற்கு அனுப்ப
முடியாமல் இருப்பு வைத்துள்ளதால் புதிதாக நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக சாலை ஓரங்களில் கொட்டி வைத்து இருக்கும் நெல் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து முளைக்க துவங்கி விட்டனை.