Skip to content

கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்றனரா? அல்லது இலங்கையிலிருந்து தமிழகமும் நோக்கி கொண்டு வந்தனரா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கீழதோட்டம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீனவர்கள் ராமச்சந்திரன், சுப்ரமணியன் உள்ளிட்டோர்
இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பொழுது ,திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கரையிலிருந்து சுமார் 4 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடிக்க சென்றபோது, அங்கு கடலில் படகு ஒன்று உடைந்து, அதில் இருந்த இருவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது தெரிந்து அருகில் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு, அவர்களுடன் கடலில் மிதந்த ஏழு கஞ்சா மூட்டைகளையும் படகில் ஏற்றி, கீழத்தோட்டம் கடற்கரை வந்து அதிராம்பட்டினம் சட்டம் ஒழுங்கு போலீசிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்த இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள், இலங்கை, மன்னார், ஹரிபூர்சிலாவூத் பகுதியை சேர்ந்த அமலதாசன் மகன் அஜந்தன் (வயது 36), இலங்கை, மன்னார், தோப்புவெளி பகுதியை சேர்ந்த வரப்பிரகாசம் மகன் ஜீவானந்தம் (வயது 51) கஞ்சா முட்டையுடன் நடுக்கடலில் பிடிபட்ட இருவரிடமும் அதிராம்பட்டினம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!