தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு இன்று சென்றனர் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சேதுபாவா சத்திரம் ஆகிய துறைமுக பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன இதில் 2000 மீனவர்கள் மீன் பிடிக்க செல்வார்கள் மேலும் இனப்பெருக்க காலம் 61 நாட்கள் முடிவடைந்து விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை இன்ஜின் வேலை மற்றும் படகில் உள்ள அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு மீன்துறை அறிவிக்கும் வண்ணக் கலர்களை படகில் வர்ணம் பூசி மின்துறை உதவி இயக்குனர் பார்வையிட்டு படகு நல்ல நிலைமையில் உள்ளது என்று சான்று கொடுத்த பிறகு விசைப்படகுக்கு மீன் துறை மூலம் டோக்கன் வழங்கி மீன் பிடிக்க இன்று காலை அனைத்து விசைப் படகுகளும் மீன் பிடிக்க சென்றனர் இது குறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் கூறுகையில் மீன் இனப்பெருக்க காலம் 61 நாட்கள் முடிந்து சென்ற 14ஆம் தேதி மீன் பிடிக்க விசைப்படகுகள் செல்லும் நிலையில் கடலில் பலத்த காற்று வீசப்படும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்துறை எச்சரித்து டோக்கன் வழங்கவில்லை இன்று அனைத்து படகுகளும் மீன்பிடிக்க செல்வதற்கு மின்துறை அனுமதி கொடுத்து டோக்கன் வழங்கி அனைத்து விசைப்படகு மீனவர்களும் மீன் பிடிக்க சென்று உள்ளனர்
