தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருடப்பட்ட ஒட்டகத்தை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
கரூரை சேர்ந்த அழகர் என்பவர் கிரேட் இந்தியன் சர்க்கஸ் எனும் பெயரில் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ் நடத்தும் அழகர், தஞ்சை கீழவஸ்தா சாவடி எனும் பகுதியில் சர்க்கஸ் நடத்திய போது
கடந்த 15 ம் தேதி ஒட்டகம் ஒன்று காணாமல் போய் விட்டது அழகர் போலீசாரிடம் புகார் கொடுத்ததையடுத்து தஞ்சை தாலுகா போலீசாரும், வல்லம் டி.எஸ்.பி யும் தனிப்படை அமைத்து ஒட்டகத்தை தேடிய நிலையில் தஞ்சை ரெட்டிபாளையம் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் திருடப்பட்ட ஒட்டகம் கட்டியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஒட்டகத்தை போலீசார் மீட்டு சர்க்கஸ் நடத்தும் அழகரிடம் ஒப்படைத்தனர்
ஒட்டகத்தை திருடி சென்றவர் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்