தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், சமூக சேவை அமைப்பின் உதவியுடன், இரு இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது.
பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பள்ளிவாசல் குளம், அதம்பை பெருமாள் குளம் ஆகிய இரு குளங்களும், மெகா பவுண்டேசன் அமைப்பு மூலம் தூர் வாரப்பட உள்ளது.
இதற்கான பணிகளை
மெகா பவுண்டேசன் நிறுவனரும், இந்தியன் வாட்டர் வாரியர் நிமல் ராகவன் முன்னிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், திமுக கிளைச் செயலாளர்கள் ஆவணம் கோ.மதிவாணன், மு.தங்கவேல், ஜமாஅத் நிர்வாகிகள் அப்துல் கரீம், பி.என்.ஏ.ஹபிபுல்லாஹ்,
திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மீராசு, அதம்பை கிராம மக்கள், வீரியங்கோட்டை சுரேஷ், நாடியம் செந்தில்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.