Skip to content

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி”- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “தக் லைஃப் மணிரத்னத்தின் படம். தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் அளவுக்கு படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சர்வதேச தரத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி உள்ளது. வெளிநாட்டினர் பாராட்டும் அளவுக்கு தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.  எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது உயிரே, உறவே, தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என்றார்.

error: Content is protected !!