Skip to content

அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது-முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ்

சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..

நான் முதல்வராக பதவியேற்றபோது பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என்று என்னை கலைஞர் பாராட்டினார். என்னை பாசத்தோடு அரவணைத்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. தொண்டனாகத்தான் திமுகவில் இணைந்துள்ளேன். திமுகவில் இணையும் முடிவை நான் சுயமான சிந்தித்து எடுத்தேன்.

திராவிட இயக்கத்துக்கு ஒரு ஊறு வரும் என்றால் அதை தடுத்து நிறுத்தி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மு.கஸ்டாலினுக்கு உண்டு. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அனைவரையும் அரவணைத்து செல்கின்ற போக்கு அதிமுகவில் இல்லை.

எடப்பாடியால் எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது.

திமுகவில் சேர்ந்தது தலைசிறந்த முடிவு என்று எனக்கு ஆயிரக்கணக்கானோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

கட்சியையும் ஆட்சியையும் முக ஸ்டாலின் நடத்தும் பண்பு அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறது.

திமுகவில் இணைந்திருக்கிறேன். கடந்த காலத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.

தாய் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்த முதல்வருக்கு நன்றி என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!