தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தனது பிரச்சாரத்தை
வருகின்ற 13ம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டத் தலைவர் சிவா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வருகை தந்தனர்.
பின்னர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரியிடம், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்டு நேரில் மனு அளித்தார். அம்மனுவில்
அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள அனுமதி மற்றும் பாதுகாப்பு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
