Skip to content

ஒரே அணியில் இருந்தால் வெற்றி தான் … அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.அனைவரும் ஒரணியாய் உழைத்து, திமுகவின் வெற்றியை உறுதிசெய்வோம் என்று திருச்சி திமுக கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியில் கலைஞர் நகர் பகுதி, 63 -வது வார்டு பாகம் எண் : 233, பெருமாள்கோவில் தெரு, பாலக்கரை பகுதி 50. ஏ, பாகம் எண் :150 காவிரி தியேட்டர் அருகில், அரியமங்கலம் பகுதி 31-அ வார்டு பாகம் எண் : 121 கல்பாளையம் மைதானம்,
மார்க்கெட் பகுதி வார்டு 20 ஏ, பாகம் எண் -109 மணிமண்டபம் சாலை,
மலைக்கோட்டை பகுதி, வார்டு –12 ஏ, பாகம் எண் – 12, மேலச்சிந்தாமணி காவேரி நகர், ஆகிய 5 பகுதிகளில் “என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் கதிரவன், பகுதி கழகச் செயலாளர்கள் மணிவேல், ராஜ் முஹம்மது, மோகன், பாபு, ஏ.எம்.ஜி.விஜயகுமார், வட்ட செயலாளர்கள் கலியமூர்த்தி, ஞானசேகர், சாகுல், செந்தில் குமார், சுருளிராஜன், ஜெயச்சந்திரன், மற்றும் , நிர்வாகிகள், பி.எல்.ஏ, பி.எல்.சி, பி டி ஏ, ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு,தலைமை தாங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி பேசியதாவது:-
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், நம் ஆட்சியின் பயன்களை பெற்ற பயனாளிகளை அடையாளம் காண வேண்டும் .சரியான புதிய வாக்காளர்களை சேர்க்கவும், தவறுதலான போலியான வாக்காளர்களை நீக்கவும், துரிதமாக பணியாற்ற வேண்டும். இல்லங்கள் தோறும் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யவேண்டும். எஸ்.ஐ.ஆர் போன்ற ஜனநாயக விரோதப் போக்கை எதிர்கொள்ள கழகத்தின் நிர்வாகிகள், பாக முகவர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் .
அனைவரும் ஓரணியாய் உழைத்து, உதயசூரியன் வெற்றியை உறுதிசெய்வோம் . இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

error: Content is protected !!