தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 13ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5:30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இளையராஜாவின் ‘வேலியண்ட்’ சிம்பொனி இசை நிகழ்ச்சி உட்பட அவரது இசைப் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமையும். தற்பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ”ராஜாவைத் தாலாட்டும் தென்றல், நம் பாராட்டு விழா. இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.