Skip to content

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுவடைந்தது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!