ஒவ்வொரு நாளும் பிழைப்புக்காக போராடுற ஒரு சூழல்ல நமது கைகளில் வாழ்நாள் முழுக்க சம்பாதிக்க முடியாத அளவுக்கான ஒரு புதையல் கிடைச்சா நாம என்ன செய்வோம்? இந்தக் கேள்வியே ரொம்ப மலைப்பா இருக்குல்ல?ஆனால், தொலைஞ்சு போன 45 சவரன் நகையை திருப்பி உரியவர்களிடம் ஒப்படைத்த தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப்பணியாளர் பத்மா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி தம்பதியர் என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சுக்க, அந்தப் பெண் தொழிலாளியோட ஒருநாள் எப்படிப்பட்டதுன்னு முதலில் நாம புரிஞ்சுக்கணும்.
அதிகாலை அஞ்சரை மணிக்கே தொடங்கி தி.நகர் பஜார் சாலைகளில் உள்ள குப்பைகளை பெருக்கி தெருக்களை சுத்தம் செய்றதுதான் 48 வயது நிறைந்த பத்மாவின் தினசரி வேலை. ஒரு துப்புரவு தொழிலாளியாக உழைப்பைத் தாண்டி, மனரீதியாய் கடினமான வேலை இது. பத்மாவின் கணவர் சுப்ரமணி ஆட்டோ ஓட்டுநர். இன்னைக்கு வேலைக்கு போனாதான் கூலி. போகலன்னா சம்பளம் வராதுன்ற நிலைமைதான் இருவருக்குமே. சமீபத்துலதான் பத்மாவின் சம்பளம் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்துக்கு உயர்ந்ததா அவுங்களே தெரிவிச்சாங்க. இந்த மாதிரியான சூழல்ல வாழுற ஒருத்தர் ஒரு நிமிஷம் கூட யோசிக்காம லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகையை திருப்பி கொடுத்திருக்காங்க என்பதுதான், அவர்களின் நேர்மையை இமயமலை உயரத்துக்கு இன்று கொண்டு போயிருக்கு. என்னதான் நடந்தது..? பத்மாவே நம்மிடம் பேசுகிறார்.காந்தியை கொன்ற கூட்டத்தோடு எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஹிட்லருக்கு ஒப்பான மோடியோட முதல்வர் போராடி வருகிறார். அதற்காக நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்று சத்தியமங்கலத்தில் முத்தரசன் பேசினார்.ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜி ராம்ஜி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தில் நேற்று மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு விரோதமாக சட்டங்களை கொண்டு வரும் மோடி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார்.
அமித்ஷா போடுகிற உத்தரவை நிறைவேற்றும் அடிமை கட்சியாக அதிமுக மாறிவிட்டது. மகாத்மா காந்தியை கொன்ற கூட்டம் தான் தற்போது அதிகாரத்தில் உள்ளது. அன்று உயிரோடு கொன்றார்கள். இனி அவரது பெயர் இருக்கக்கூடாது என திட்டத்திலிருந்து அவரது பெயரை நீக்கி இருக்கிறார்கள். அவர்களோடு யார் சேர்கிறார்களோ அவர்களும் நிராகரிக்கப்பட வேண்டும். ஹிட்லருக்கு ஒப்பான தலைவர் மோடி. மீண்டும் ஒரு விடுதலை போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியுடன் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது நம்முடைய முழு கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

