சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி ஈபிஎஸ். காட்டுமிராண்டி தனமாக செயல்படும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை நீக்கியுள்ளார். சர்வாதிகரமாக செயல்படும் பழனிசாமிக்கு எதிராக என்ன செய்ய முடியும்? யாருடனோ கூட்டு சேர்ந்து அதிமுகவை இல்லாமல் செய்வதாக பழனிசாமி உறுதிமொழி எடுத்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் எனக் கூறி வெளியே வந்தவர், தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார். மிகவும் ரகசியமாக வைத்துவிட்டு விஜய்யுடன் சேர்ந்துள்ளார்.” என்றார்.
அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி
- by Authour

