Skip to content

படையப்பாவின் போது சிவாஜி கேட்ட கேள்வி… ரஜினி உருக்கம்

90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் படையப்பா படமும் கண்டிப்பாக இருக்கும். அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கற மாதிரி இந்த படத்தின் பாடல்கள், மற்றும் கதை காட்சிகள் இருக்கும். அதிலும் எத்தனை முறை பார்த்தாலும் கண்கலக்க வைக்கும் காட்சி என்றால் அது சிவாஜியின் நடிப்புதான். அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது அந்த வீட்டை ஒரு முறை கட்டிப்பிடித்து விட்டு வருகிறேன் என்று அவர் அதில் சாய்ந்து உட்கார கடைசியில் அந்த இடத்திலேயே அவர் உயிர் போய்விடும்.

இந்த படம் நடித்து முடித்து கொஞ்ச நாளிலேயே சிவாஜி காலமாகிவிட்டார். அவர் மறைந்தாலும் அவருடைய நினைவுகள் குறித்து ரஜினிகாந்த் உருக்கமாக பேசியிருக்கிறார். நேற்று ரஜினி வெளியிட்ட வீடியோவில், சிவாஜி படையப்பா படத்தில் நடிக்கும் போது என்கிட்ட கேட்ட கேள்வியை என்னால் மறக்கவே முடியாது. பொதுவா நான் மதியம் சாப்பிட மாட்டேன். ஃப்ரூட்ஸ் மட்டும்தான் மதியம் சாப்பிடுவேன்.

சூட்டிங் ஸ்பாட்டில் விதவிதமா சாப்பாடு இருக்கும். ஆனால் நான் ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதை பார்த்து சிவாஜி சார் டேய் நீ சாப்பிட மாட்டியா? என்று கேட்டார். நான் இல்ல சார் என்று சொன்னேன். அதற்கு இந்த விஷயத்தை ராம்குமார்க்கும், பிரபுவுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடு என்று சொன்னாரு என சிரித்தபடியே பேசிய ரஜினிகாந்த் பிறகு சொன்ன விஷயம்தான் நெகிழ வைத்தது.

அதாவது ரஜினிகாந்தை சிவாஜி பாராட்டினாராம். எதற்காக என்றால் ரஜினிகாந்த் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே திடீரென இமயமலைக்கு கிளம்பி போய்விடுவார், அமெரிக்காவுக்கு கிளம்பி போய்விடுவார் இது பற்றி தான் சிவாஜி பாராட்டினாராம். நான் உன்னை பற்றி பிரபு கிட்ட பேசும்போது கூட ரஜினியை பாரு புரியாத ஆளா இருக்கிறான் நல்லா நடிக்க வாய்ப்பு கிடைக்கிற போது தொடர்ந்து நடித்துக்கொணடு இருக்கணும். ஆனா இவன் திடீர்னு பிரேக் போட்டுட்டு இமயமலைக்கு போறேன், அங்க போறேன் இங்க போறேன்னு சுத்த கிளம்பிடுறான் இருந்தான்.

அவனால எப்படி தொடர்ந்து நடிக்க முடியும்னு பேசுவேன். ஆனா இப்பதான் புரியுது நீ செய்யறது தான் சரி. நான் தொடர்ந்து சினிமாவில் நடிச்சிட்டு இருந்த சமயத்தில் கொஞ்சம் நாள் வாய்ப்பு இல்லாம வீட்டிலேயே இருந்துட்டேன். அந்த நேரத்தில் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப டிப்ரசனில் இருந்தேன். ஆனால் நானும் பிஸியா நடிச்சிட்டு இருக்கும்போது டைம் பாஸுக்கு என்ன பண்ணனும் என்று யோசித்து வைத்திருந்தாலோ அல்லது அப்போ அப்போ டைம் பாஸ் செய்து இருந்தாலோ எனக்கும் அந்த டிப்ரஷன் பிரச்சனை எல்லாம் வந்திருக்காது. உன்ன பார்த்து நிறைய கத்துக்கிட்டேன் என்று பாராட்டுனாரு. இதுதான் எனக்கு மிகப்பெரிய பாராட்டாக இருந்தது என்று ரஜினி பேசி இருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசும் போது சிவாஜி ஒரு விஷயத்தை உருக்கமாக பேசினாராம். அதாவது நான் இறந்து போயிட்டா என் உடலோடு சுடுகாடு வரைக்கும் வருவியான்னு கேட்டாராம். ஏன் சார் இப்படி பேசுறீங்கன்னு ரஜினி கேட்க, அதற்கு சிவாஜி எல்லாரும் ஒரு நாள் இறந்து போக தானே போறாங்க. எனக்கும் வயசு ஆயிடுச்சு அதனால வருவியா? மாட்டியா டா? என்று உரிமையா கேட்டாரு. கண்டிப்பா வருவேன்னு சொன்னேன். அதனாலதான் அவர் இறந்த சமயத்தில் அவர் உடலுடன் நான் கடைசி வரைக்கும் நின்று காரியங்களை செய்தேன். நான் இதுவரைக்கும் எந்த ஒரு இறப்பிலும் அப்படி இருந்தது கிடையாது. ஆனால் அவருக்காக நான் அன்னைக்கு முழுக்க இருந்தேன். ஒரு ஆக்சிடெண்ட் போலத்தான் எல்லாமே நடந்து முடிந்தது. படையப்பா படத்தில் நடித்த சிவாஜி சார், மணிவண்ணன், சௌந்தர்யா உட்பட சில டெக்னீசியன்களும் இப்போ இல்ல. அவர்களுக்கு தான் இந்த படத்தை நான் சமர்ப்பிக்கிறேன் என்று ரஜினி பேசி இருக்கிறார்.

error: Content is protected !!