Skip to content

நாளை கத்தரி வெயில் தொடங்குகிறது-மக்கள் எச்சரிக்கையாக இருங்க

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி  ஃபாரன்ஹீட் வரை இருக்கும். இதனால் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவதால் இன்று முதல் வருகிற 06ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!