குளித்தலை மணிகண்டன் நகரில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து பீரோவில் துணிகளை கலைத்து காரில் தப்பிச்சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் ஊராட்சி மணிகண்டன் நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் 42. இவர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே டீக்கடை மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் கடை நடத்தி வருகின்றார். வழக்கம் போல் இன்று காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு வந்துள்ளனர். அதன் பிறகு வீட்டிற்கு டிரில்லிங் போடுவதற்காக வந்த
தொழிலாளி கதவு உடைக்கப்பட்டது குறித்து வீட்டு உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சுகன்யா முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு சிதறி கிடந்துள்ளது. பணம், நகைகளை ஏதும் கிடைக்காததால் துணிகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவில் காரில் 2 நபர்கள் வெளியே இறங்கி வீட்டின் காம்பவுன்ட் சுவரில் ஏறி உள்ளே சென்று 20 நிமிடம் கழித்து வெளியே குதித்து காரில் மணப்பாறை செல்லும் சாலையில் தப்பி செல்லும் காட்சியை வைத்து குளித்தலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்