திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், சிறுகாம்பூரை அடுத்த செங்குடியைச் சேர்ந்த
ராமசாமி – சின்னம்மாள் தம்பதியரின் மகன் கோவிந்தராஜ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீயபுரம் கடைவீதி மற்றும் ஜீயபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று டான்ஸ் ஆடி ரீல்ஸ் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்த சூழலில் ஜீயபுரம் போலீசார் ரீல்ஸ் வெளியிட்ட கோவிந்தராஜைகாவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன்
அவருக்கு அறிவுரைகள் வழங்கினர். இதைத் தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட கோவிந்தராஜ் தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
இனிவரும் காலங்களில் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். என்னைப் போன்று வேறு யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் மனைவி 5 மாத கர்ப்பமாக உள்ளார். நான் செய்த தவறை போன்று இனி யாரும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

