Skip to content

இரட்டை வேடம் இல்லை..உண்மையாக உழைத்தவர் அண்ணா… தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி (செப்டம்பர் 15, 2025) அவரைப் புகழ்ந்து, மாநில உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். “மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர், இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர், தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்,

சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டவர், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர், குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர், கொள்கை வழி நின்றவர், இரட்டை வேடம் போடாமல் மக்களுக்காக உண்மையாக உழைத்தவர், கனிவின் திருவுருவம், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்,” என்று விஜய் தனது அறிக்கையில் பாராட்டினார்.Image

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர். குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர். கொள்கை வழி நின்றவர். கனிவின் திருவுருவம். இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர்

பேரறிஞர் பெருந்தகைஅண்ணா அவர்கள். தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து. மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். ‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை. ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்” எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!