Skip to content

சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை…

  • by Authour

பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே; புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா வகை பாதிப்பு மட்டுமே உள்ளது; ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்; வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று” சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
error: Content is protected !!