ராயன், தங்கலான், அந்தகன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சாக்ஷி அகர்வால். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் படங்களில் அரண்மனை 3, பஹீரா, டெடி, காலா, ராஜா ராணி, விசுவாசம் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையும் பிக்பாஸ் 3 மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர்.தான் நடித்துள்ள ராயன், தங்கலான், அந்தகன் படம் வெற்றி பெற வேண்டியும், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் இன்று வெளியாக உள்ளதாகவும் அந்த படம் வெற்றியடைய வேண்டியும் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். கோவிலுக்கு வெளியே வந்த நடிகை சாக்ஷி அகர்வாலுடன் பக்தர்கள் பெண்கள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

