தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் திருமஞ்சன விழா நடைபெற்றது அதை ஒட்டி கணபதி ஹோமம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 30 வகையான அபிஷேகம் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம்
பஞ்சாமிர்தம் அபிஷேகம் என 30 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சாமிக்கு வெள்ளி கவசம் ஜோடிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் ஆலயத்தில் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன