Skip to content

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை மாதம் பிறந்த நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு திரைப்பட நடிகர் ஜெயம் ரவி இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். சம்பந்த விநாயகர் மற்றும் சாமி அம்பாளை தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. ஜெயம் ரவியை பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் ஜெயம் ரவியுடன் நின்று செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். ஒருவருடைய மனமும் கோணாமல் அனைவருடைய செல்ஃபி புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்று போஸ் கொடுத்த அவர், பக்தர்களின் செல்போனை வாங்கி அவரே செல்வியும் எடுத்து  கொடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, காதலிக்க நேரமில்லை படம் வெளி வந்ததற்கும் நான் கோவிலுக்கு வந்ததற்கும் சம்பந்தமில்லை. தாய், தந்தையர் செய்த புண்ணியத்தாலும், மன நிம்மதிக்காகவும் கோவிலுக்கு வந்ததாக தெரிவித்தார். அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினால் திருவண்ணாமலைக்கு வந்து விடுவேன் எனக் கூறிய அவர், ஜினி படம் 95 சதவீதம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

error: Content is protected !!