வள்ளலார் தினத்தையொட்டி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல் நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்ரவரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்தப்படும். மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

