கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக சார்பில் வருகின்ற புதன்கிழமை 17ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு முப்பெரும் விழா பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள்
அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் முப்பெரும் விழா பொறுப்பாளர்கள் மாவட்ட திமுக ஒன்றிய நகர பேரு கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்வர் வருகையின் போது சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.