ஆனைமலை புலிகளுக்கு காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் காட்டு யானைகள் சிறுத்தை,புலி, கருஞ்சிறுத்தை , செந் நாய், காட்டுமாடு மான்கள் மற்றும் அபூர்வ தாவரங்கள் எண்ணற்ற வசித்து வருகின்றன இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட டாப்ஸ்லிப்அருகிலுள்ள கேரளா வனப்பகுதி அடர் வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரவில் ரோந்து சென்ற பொழுது தற்செயலாக ஒற்றை வரி புலி வேட்டையாட வனப்பகுதியில் இருப்பதைக் கண்ட வனத்துறையினர் சுதாரித்துக் கொண்டனர் பின் வனத்துறையினர் கண்ட புலி திடீரென காட்டுக்குள் மறைந்து சென்றது,இதை அடுத்து வனத்துறையினர் புலியைச் தேடிய போது அடர் வனப்பகுதிக்குள் வன விலங்குகளை வேட்டையாட சென்றது தெரியவந்தது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் புலி நடமாட்டம் உள்ளதால் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துள்ளனர்.
புலி நடமாட்டம்…. பொள்ளாச்சி ஆனைமலை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை….
- by Authour
