நகை, பணம், செயின், வாகனங்கள் திருடும் , வரிசையில் கடந்த சில காலங்களாக ஆடுகளும் திருடு போனது. அந்த வரிசையில் தற்பொழுது சேவலுக்கு திருடப்படும் சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது. தற்பொழுது அதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை அடுத்த போத்தனூர் அருகே சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையில் மரப்பட்டறை வைத்து இருப்பவர் கனகராஜ். இவர் பட்டறையில் சேவல்கள் வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த சேவல் திடீரென காணாமல் போனது, அதனை அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தார். அப்பொழுது அங்கு வந்த டிக் டாக் வாலிபர் ஒருவர் லாபகமாக சேவலை பிடிப்பதும் அதை டீசர்ட்க்குள் வைத்து அமுக்கியபடி தப்பிச் செல்வதும் தெரிந்தது.
சாலையின் வெளியே உள்ள மற்றொரு கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் தயாராக நின்ற நண்பனின் வாகனத்தில் ஏறி சேவல் உடன் திருடன் தப்பும் காட்சியும் பதிவாகி இருந்தது.
ஆசை ஆசையாய் வளர்த்த சேவல் திருடு போனதால் மனமுடைந்த கனகராஜ் அதை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்று சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் புகார் செய்து உள்ளார்.
ஆதாரத்தை வாங்கிக் கொண்ட காவலர் ஒருவர் நீ கிளம்பு…. நாளைக்கே சேவல் உன் வீட்ல நிக்கும்; திருடன் ஜெயில்ல இருப்பான் என்று பஞ்ச் பேசி அனுப்பி வைத்தார்.
சேவல் கிடைத்தால் போதும் என்று கனகராஜ் வீட்டுக்கு திரும்பி விட்டார்.