திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பாலசுப்ரமணி (42 )இவருக்கு பூங்கோதை என்பவருடன் திருமணமாகி இரண்டு ஆண்குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவர் தற்போது அதே பகுதியில் 7வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
மேலும் இவர் அதே பகுதியில் இவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்
இந்த நிலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் அப்போது மின்பெட்டியில் திடீரென மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
அப்போது அந்த மின் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய பாலசுப்பிரமணி ஈடுபட்டபோது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்க்க சென்ற ஏழாவது வார்டு உறுப்பினரை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.