திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த TMC காலனி பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு கட்டிக் கொடுத்துள்ளனர். TMC காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சரசு(50) என்பவர் திருப்பத்தூர் நகராட்சியில் 20 வருடங்களாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு குடியிருப்பின் மேற்கூரை பூச்சி திடீரென பெயர்ந்து கீழே விழுந்ததில் வீட்டில் இருந்த பெண் தூய்மை பணியாளர் சரசு தலையின் மீது விழுந்துள்ளது. இதனால் சரசுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரசுவிற்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் 20க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் எங்கள் குடியிருப்பு பழுதடைந்துள்ளது புதுப்பித்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. திருப்பத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளர் குடியிருப்பில் மேற்கூரை பூச்சி திடீரென பெயர்ந்து கீழே விழுந்து தூய்மை பணியாளரின் தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.