திருப்பத்தூரில் மாவட்ட நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி என்பவர் அனைத்து நீதிபதிகளையும் தன் வசம் கொண்டு பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்கமால் காலதாமதம் செய்து வருவதாகவும்
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினால் காவல்துறையினரை ஏவிவிட்டு பொய் வழக்கு போட்டு மிரட்டல் விடுவதாகவும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதனால் இன்று ஒருகிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு மாவட்ட நீதிபதி மீனாகுமாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறகணித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மீனாகுமாரியை பணியிட மாற்றம் செய்யும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லாமல் புறகணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.