Skip to content

திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி பகுதியை அமைந்துள்ள முருகன் பாளையம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் மேலும் 20 வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தராததால் அப்பகுதி மக்கள் நாத்து நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

மேலும் ஊர் மக்கள் கூறுகையில் முருகன் பாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தரவில்லை பலமுறை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் மனு அளித்தும் மேலும் கிராம சபை கூட்டங்களில் மனு அளித்தும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எங்களின் கை தான் வலிக்கிறது ஆனால் எங்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்

மேலும் கொடும்பள்ளி இருக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறோம் இதன் காரணமாக தாய்மார்கள் கைக்குழந்தைகளை சேரும் சிகதியுமாக இருக்கும் மண் சாலையில் எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது என தெரிவிக்கிறார்கள். பின்பு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்

பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவும் கூறுகிறார்கள் . இதன் காரணமாக இன்று பள்ளி குழந்தைகள் விடுமுறை எடுத்துள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள்

பின்பு அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சேரும் சகதியுமாக இருக்கும் சாலையில் நடந்து செல்லும் பொழுது வலுக்கி கீழே விழுந்ததில் அவருடைய கால் முறிவு ஏற்பட்டுள்ளது என வேதனுடன் தெரிவிக்கிறார்கள்

மேலும் அப்பகுதியில் வார்டு நம்பராக இருக்கும் லலிதா என்பவர் இப்பகுதியில் வார்டு நம்பராக 5 வருடமாக இருந்து வருகிறேன் 20 வருடங்களாக சாலை அமைத்து தரவில்லை இதன் காரணமாக ஊர் பொதுமக்கள் எங்களுக்கு வார்டு நம்பர் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என கேட்கிறார்கள் மேலே இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய குழு உறுப்பினர் தலைவர்கள் அனைவரும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையும் எடுக்காத காரணத்தினால் எங்கள் ஊர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என கூறுகிறார்கள்

இதன் காரணமாக உடனடியாக முருகன் பாளையத்துக்கு சாலை பணி அமைத்து தரவில்லை என்றால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!