Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.4640 குறைவு..

சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 வரை உயர்ந்த நிலையில் இன்று காலையிலேயே ரூ. 5,040க்கு விற்பனை செய்யப்பட்டது..
இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.580 குறைந்து ரூ.14,320 க்கு விற்கப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.300க்கும் கிலோ வெள்ளி ரூ.20000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!